ஸ்மார்ட்போனிற்கு ரூ. 12 ஆயிரம் விலை குறைப்பு - நோக்கியா சூப்பர் அறிவிப்பு

Category : Mobiles | Sub Category : Posted on 2023-09-14


ஸ்மார்ட்போனிற்கு ரூ. 12 ஆயிரம் விலை குறைப்பு - நோக்கியா சூப்பர் அறிவிப்பு

நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு அறிவிப்பு. நோக்கியா X30 5ஜி மாடல் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது. நோக்கியா X30 5ஜி மாடல் விலை ரூ. 50 ஆயிரத்திற்கு சற்றே குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மாடலின் அம்சங்கள் மற்றும் அதன் விலை காரணமாக பலரும் இந்த மாடலை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ. 12 ஆயிரம் குறைந்து இருக்கிறது.

முன்னதாக ரூ. 48 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ. 36 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெரி என ஒற்றை வேரியண்டிலேயே கிடைக்கிறது.

விலை குறைப்பு நோக்கியா மற்றும் அமேசான் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் மாற்றப்பட்டு விட்டது. நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போன் ஐஸ் வைட் மற்றும் கிளவுடி புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

நோக்கியா X30 5ஜி அம்சங்கள்: 6.43 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் அட்ரினோ 619L GPU 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி டூயல் சிம் ஸ்லாட் ஆண்ட்ராய்டு 12 50MP பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ் 13MP அல்ட்ரா வைடு கேமரா, கார்னிங் கொரில்லா கிளாஸ் DX+ கேமரா கிளாஸ் பாதுகாப்பு 16MP செல்ஃபி கேமரா இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வாட்டர் ரெசிஸ்டண்ட் IP67 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் யு.எஸ்.பி. டைப் சி 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Leave a Comment: