இந்தியாவில் ஐபோன் 15 பிளஸ் உற்பத்தி - இணையத்தில் லீக் ஆன புது தகவல்

Category : Mobiles | Sub Category : Posted on 2023-09-16


இந்தியாவில் ஐபோன் 15 பிளஸ் உற்பத்தி - இணையத்தில் லீக் ஆன புது தகவல்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்கள் விற்பனையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பழைய ஐபோன் மாடல்கள் விலை குறைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மெல்ல மாற்றும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் உற்பத்தி இந்தியாவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் உற்பத்தியை அடுத்த காலாண்டு (அக்டோபர் முதல் டிசம்பர்) வாக்கில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் உற்பத்தி தமிழ் நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் நடைபெற இருக்கிறது. ஐபோன் 15-ஐ தொடர்ந்து ஐபோன் 15 பிளஸ் உற்பத்தி தமிழ்நாட்டில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்கள் விற்பனையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், புதிய ஐபோன்கள் அறிமுகத்தை தொடர்ந்து பழைய மாடல்கள் விலை குறைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுவிர அடுத்த காலாண்டில் ஆப்பிள் ஐபோன்கள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது. பண்டிகை காலத்தில் அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஆப்பிள் நிறுவனம் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்களையும் இங்கு விற்பனைக்கு கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தி மிகவும் குறைவாக இருப்பதும் இதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இந்தியாவில் ஐபோன்களின் உற்பத்தி குறைவாக இருக்கும் போதிலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது கணிசமான அளவு அதிகம் ஆகும்.

Leave a Comment: