குறைந்த விலையில் 'Curved' டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்

Category : Mobiles | Sub Category : Posted on 2023-09-21


குறைந்த விலையில் 'Curved' டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்

ஐடெல் நிறுவனத்தின் புதிய S சீரிஸ் ஸ்மார்ட்போன் டீசர் வெளியாகி உள்ளது. முன்னதாக ஆப்பிரிக்க சந்தையில் ஐடெல் S23 பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. ஐடெல் நிறுவனத்தின் S23 ஸ்மார்ட்போன் கடந்த ஜூன் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ. 8 ஆயிரத்து 799 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐடெல் S23 ஸ்மார்ட்போனின் பிளஸ் வேரியண்ட் சமீபத்தில் ஆப்பிரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் ஐடெல் S23 பிளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகிவிட்டது. முன்னதாக டிப்ஸ்டர் இஷான் அகர்வால் வெளியிட்ட தகவல்களில் ஐடெல் S23 பிளஸ் மாடல் ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகும் முதல் 3D Curved AMOLED டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என்று தெரிவித்து இருந்தார்.

ஐடெல் S23 பிளஸ் மாடலில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, வளைந்த ஓரங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் FHD+ ரெசல்யூஷன், 500 நிட்ஸ் பிரைட்னஸ், கொரில்லா கிளாஸ் 5, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 32MP செல்ஃபி கேமரா, 50MP பிரைமரி கேமரா, ஆக்சில்லரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஐடெல் ஒ.எஸ். 13, வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் யுனிசாக் டி616 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment: