அடுத்த வாரம் அறிமுகமாகும் கேலக்ஸி S23 FE.. இணையத்தில் லீக் ஆன புது தகவல்

Category : Mobiles | Sub Category : Posted on 2023-09-25


அடுத்த வாரம் அறிமுகமாகும் கேலக்ஸி S23 FE.. இணையத்தில் லீக் ஆன புது தகவல்

வெளியீட்டு தேதி அந்நிறுவனத்தின் அர்ஜென்டினா வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. சாம்சங் நிறுவனம் அடுத்த வாரம் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக கேலக்ஸி S23 FE இருக்கிறது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஸ்மார்ட்போனாக இருக்கும் நிலையில், இதன் வெளியீடு சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், புதிய கேலக்ஸி S23 FE மாடலின் வெளியீட்டு தேதி அந்நிறுவனத்தின் அர்ஜென்டினா வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு தான் கேலக்ஸி S23 FE ஸ்மார்ட்போனிற்கான டீசரை சாம்சங் இந்தியா வெளியிட்டு இருந்தது. டீசரில் அக்டோபர் வெளியீடு மட்டும் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும், சரியான வெளியீட்டு தேதி தொடர்ந்து ரகசியமாக உள்ளது. அந்த வகையில் தான் சாம்சங் அர்ஜென்டினா வலைதளத்தில் கேலக்ஸி S23 FE வெளியீட்டு தேதி லீக் ஆகி உள்ளது. அதன்படி கேலக்ஸி S23 FE மற்றும் கேலக்ஸி பட்ஸ் FE, கேலக்ஸி டேப் S9 FE போன்ற சாதனங்கள் அக்டோபர் 4-ம் தேதி அறிமுகமாகும் என்று தெரியவந்துள்ளது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் அடுத்த வாரம் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்யும். புதிய கேலக்ஸி சாதனங்கள் வெளியீடு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது லீக் ஆகி இருக்கும் தேதி சர்வதேச வெளியீட்டை உணர்த்தும் என்றே தெரிகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி S23 FE மாடலில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 அல்லது எக்சைனோஸ் 2200 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 50MP பிரைமரி கேமரா, 10MP செல்ஃபி கேமரா, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment: