ஐபோன் 15 சீரிசில் அந்த கேபிளை பயன்படுத்தாதீங்க.. ஆப்பிள் விற்பனையாளர்

Category : Mobiles | Sub Category : Posted on 2023-10-03


ஐபோன் 15 சீரிசில் அந்த கேபிளை பயன்படுத்தாதீங்க.. ஆப்பிள் விற்பனையாளர்

ஐபோன் 15 சீரிசில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் உள்ளது. ஐபோன் 15 ப்ரோ மாடல்களுடன் யு.எஸ்.பி. டைப் 2 கேபிள் வழங்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் வொண்டர்லஸ்ட் நிகழ்வில் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை செப்டம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் 15 சீரிசில் ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் போர்ட் வழங்கி இருக்கிறது. எனினும், ஆண்ட்ராய்டு யு.எஸ்.பி. டைப் சி கேபிள் மூலம் ஐபோன் 15 சீரிசை சார்ஜ் செய்யும் போது, சிக்கல் ஏற்படும் என்று ஆப்பிள் விற்பனையாளர் தெரிவித்து இருக்கிறார்.

ஐபோன் 15 சீரிசில்- ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் உள்ளன. இவை அனைத்திலும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளன. எனினும், ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை ஆண்ட்ராய்டு யு.எஸ்.பி. டைப் சி கேபிள் மூலம் சார்ஜ் செய்தால், ஐபோன் தீப்பிடிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக சீனாவை சேர்ந்த விற்பனையாளர் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவலில் உண்மையில்லை என்றும், இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு ஆப்பிள் நிறுவனம் தனது யு.எஸ்.பி. டைப் சி கேபிள்களின் விற்பனையை அதிகப்படுத்த நினைப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஆப்பிள் நிறுவன வலைதளத்தில் புதிய ஐபோன் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி ஸ்டாண்டர்டு கேபிள் மூலம் சார்ஜ் செய்யலாம் என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

ஐபோன் 15 சீரிசில் உள்ள யு.எஸ்.பி. டைப் சி போர்ட், லைட்னிங் போர்ட்-ஐ விட 15 மடங்கு அதிவேக திறன் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மாடல்களை வாங்குவோருக்கு யு.எஸ்.பி. டைப் 2 கேபிள் வழங்கப்படுகிறது. இதைவிட அதிவேக அனுபவம் பெற நினைப்பவர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் யு.எஸ்.பி. டைப் 3 கேபிளை வாங்கிட முடியும்.

maalaimalar.com

Leave a Comment: