Vivo Y17s Launched in India : MediaTek ப்ராசஸர், 50MP கேமரா, 5000mAh பேட்டரியுடன் Vivo Y17s வெளியீடு! ஸ்பெக்ஸ் மற்றும் முழு விவரங்கள்!

Category : Mobiles | Sub Category : Posted on 2023-10-04


Vivo Y17s Launched in India : MediaTek ப்ராசஸர், 50MP கேமரா, 5000mAh பேட்டரியுடன் Vivo Y17s வெளியீடு! ஸ்பெக்ஸ் மற்றும் முழு விவரங்கள்!

கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவில் வெளியான Vivo Y17 மாடலின் வரிசையில் தற்போது Vivo Y17s மாடல் மொபைல் வெளியிடப்பட்டுள்ளது. MediaTek ப்ராசஸர், 50MP கேமரா, 5000mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு வெளியாகியுள்ள இந்த மொபைலின் இதர தொழில்நுட்ப விவரங்கள், விலை, விற்பனை உள்ளிட்ட விரிவான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

​Vivo Y17s ப்ராசஸர்:Vivo Y17s மொபைலில் 4GB of LPDDR4X ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதியோடு கூடிய MediaTek Helio G85 SoC ப்ராசஸர் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த டிவைஸ், Android 13-based Funtouch OS 13 அடிப்படையில் இயங்குகிறது.
 

Vivo Y17s டிஸ்பிளே மற்றும் பேட்டரிVivo Y17s -ல் 6.56 இன்ச் (1,612 x 720 பிக்ஸல்ஸ்) IPS LCD டிஸ்பிளே மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் இடம்பெற்றுள்ளது. மேலும் இதில், 5000mAh திறன் கொண்ட பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
 

​Vivo Y17s கேமராVivo Y17s மொபைலில் டூயல் கேமரா செட்டப் இடம்பெற்றுள்ளது. அதன்படி பின்புறம் 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்ஸல் டெப்த் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்புறம் 8 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா இடம்பெற்றுள்ளது.
 

​Vivo Y17s நிறம் மற்றும் ஸ்டோரேஜ்Vivo Y17s மொபைல் Forest Green மற்றும் Glitter Purple ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இது , 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் வசதி மற்றும் 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.


​Vivo Y17s விலை விவரம்:Vivo Y17s மொபைல் இரு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதன் 4GB ரேம் + 64GB வேரியண்ட் 11,499 ரூபாய் விலையில் கிடைக்கிறது. 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 12,999 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. பிளிப்கார்ட், அமேசான், விவோ இணயதளம் உள்ளிட்டவற்றின் வழியாக இந்த மொபைலை வாங்கி கொள்ளலாம்.

samayam.com

Leave a Comment: