வேற லெவல் அப்கிரேடுகள்.. சூப்பர் அம்சங்கள்.. பிக்சல் 8 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்!

Category : Mobiles | Sub Category : Posted on 2023-10-06


வேற லெவல் அப்கிரேடுகள்.. சூப்பர் அம்சங்கள்.. பிக்சல் 8 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்!

பிக்சல் 8 ப்ரோ மாடலில் பாலிஷ்டு அலுமினியம் ஃபிரேம், மேட் பேக் பிளாக் கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது.பிக்சல் 8 ப்ரோ மாடலில் 5050 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பிக்சல் 8 மாடலில் 6.2 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 8 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் குவாட் HD+ OLED டிஸ்ப்ளே, 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது. 

பிக்சல் 8 ப்ரோ மாடலில் பாலிஷ்டு அலுமினியம் ஃபிரேம், மேட் பேக் பிளாக் கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது. பிக்சல் 8 மாடலில் மெட்டல் ஃபினிஷ் மற்றும் பாலிஷ்டு கிளாஸ் பேக் உள்ளது. இரு மாடல்களிலும் டென்சார் G3 பிராசஸர், டைட்டன் M2 செக்யுரிட்டி சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ். உள்ளது.

இரு மாடல்களிலும் 50MP பிரைமரி கேமரா, பிக்சல் 8 மாடலில் 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 48MP அல்ட்ரா வைடு லென்ஸ் உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடலில் 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 8 ஸ்மார்ட்போனில் 4575 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடலில் 5050 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. 

இந்திய சந்தையில் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் அப்சிடியன், ஹசெல் மற்றும் ரோஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 75 ஆயிரத்து 999 என்றும் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 82 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடல் அப்சிடியன் மற்றும் பே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 

கூகுள் பிக்சல் 8 ப்ரோ மாடலின் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 06 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Leave a Comment: